Friday, February 19, 2010

கோவையின் சிறப்பு சிறுவாணி குடிநீர் ---V.ROHINI

கோவை என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது இரண்டு மட்டுமே. ஒன்று சுவையான சிறுவாணி குடிநீர், மற்றொன்று ஆண்டு முழுவதும் அருமையான சீதோஷ்ண நிலை.
சிறுவாணி நீர் கோவைக்கு முழுமையாகப் பயன்படும் குடிநீர் ஆதாரம் ஆகும். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்து வருகிறது. விரைவில் கோவை மாநகராட்சி இதனை எடுத்து நடத்த முயன்றுவருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி உற்பத்தியாகி கேரள எல்லையில் அணைக்கட்டு கட்டி அங்கிருந்து குழாய்கள் மூலம் கோவை நகருக்குக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இது கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிறுவாணி குடிநீர் உலகிலேயே இரண்டாவது சுவையான குடிநீராகக் கருதப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment