Friday, February 19, 2010

மிக வேகமாக பறக்கும் ஹம்மிங்... - V.ROHINI

உலகின் மிக வேகமாக பறக்கின்ற பறவை பெரிக்ரேயன் வால்கன் என நீண்ட நாட்களாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது வெளிவந்த ஆய்வில் உலகின் மிகச்சிறிய பறவையான ஹம்மிங் பேர்ட் தான் அதிவேகமாக பறக்கின்ற பறவை என தெரிய வந்துள்ளது. இப்பறவை தோற்றத்தில் சிட்டுக்குருவியைப் போன்று மிக அழகாக இருக்கும். அண்மையில் அதிவேகமாகப் பறக்கும் பறவைகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வொன்றில் இந்த ஹம்மிங் பறவை தான் அதிவேகமாக பறக்கும் பறவை என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஹம்மிங் பறவையின் அலகு முதல் வால் வரையான மொத்த நீளமே 57 மில்லி மீட்டர்தான்.
பொதுவாக சூரியனை நோக்கியே பறக்கும் தன்மை கொண்ட இப்பறவையின் தலைப்பகுதி சூரிய வெளிச்சத்தில் பல வண்ணங்களில் மின்னும் தன்மை கொண்டது. இந்த பிரதிபலிப்பை கொண்டு ஆய்வு செய்ததில் ஹம்மிங் பறவை வினாடிக்கு 90 அடி பறப்பது தெரிய வந்துள்ளது.
ஹம்மிங் பறவை. அதன் சிறகுகளை அசைக்கின்ற வேகம் மட்டுமே வினாடிக்கு 50 முதல் 60 தடவைகளாகும். அதுமட்டுமா? சாம்பல் நிறமுடைய திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு ஒன்பது தடவை தான் துடிக்கின்றது. ஆனால் ஹம்மிங் பறவை வானில் வேகமாக பறக்கும் போது அதனுடைய இதயம் நிமிடத்திற்கு 1200 தடவை துடிக்கின்றதாம்.
உலகின் மிக வேகமாக பறக்கும் பறவை என்று கருதப்பட்ட பெரிக்ரேயன் வால்கனின் வேகம் வினாடிக்கு 229 அடி. அதாவது 70 மீட்டர் ஆகும்.
இந்த பெரிக்ரேயின் வால்கனை விட ஹம்மிங் பறவை ஒரு வினாடியில் கடக்கும் தூரம் குறைவு தான் என்றாலும் உருவத்தை ஒப்பிடுகையில் ஹம்மிங் பறவையின் வேகம் மிக அதிகமாகும். அதாவது ஒரு நிமிடத்திற்கு தனது உடல் நீளத்தை காட்டிலும் 385 மடங்கு தூரம் ஹம்மிங் பறவை பறக்கிறது. ஆனால் வால்கன் பறப்பது வெறும் 200 மடங்கு மட்டுமே.

No comments:

Post a Comment