பூமியின் சுழற்சி காற்றாகிறது
காற்றின் வருடல் தென்றலாகிறது
தாயின் பாசம் அமுதாகிறது
அமுதின் அணுக்கள் உயிராகிறது
தந்தையின் நேசம் அறிவாகிறது
அறிவின் சுழற்சி ஆக்கமாகிறது
அன்பின் சப்தம் காதலாகிறது
காதலின் பிரிவு தவிப்பாகிறது
தவிப்பின் உள்ளளி கவிதையாகிறது
கவிதையின் வீச்சு கதையாகிறது
கதையின் ஓசை நாவலாகிறது
நாவலின் ராகம் படைப்பாகிறது
படைப்பின் ரகசியம் பிரம்மனாகிறார்
No comments:
Post a Comment