Tuesday, March 30, 2010

தமிழின் பெருமை

-வே. மோகன்ராஜ்


அமிழ்தமிழ் தென்றால் தமிழாகும்
தமிழென்று திர்த்தால் அமிழ்தமாகும்.
அன்பும் பண்பும் தமிழாகும் -அகம் புறம்
அறிவே அதன் மூச்சாகும்.

காதல் வாழ்வும், களவியல் நெறியும்
ஊடல் கூடல் உளவியல் மாண்பும்
கற்றுத் தந்தது தமிழன்றோ...? தொன்மை
சங்கநூல்களின், விரசமில்லா சரசமாடல்
அதுவன்றோ?

அகம் நானூறும் புறம் நானூறும்-பத்துப்பாட்டும்
பதிணென்கீழ்கணக்கும்-ஐம்பெரும்
காப்பியங்கள் புராண இதிகாசங்கள்
தனித்தனி கண்ட செம்மொழி-அவனியில்
வேறுண்டோ? எம் அன்னைத்-
தமிழுக்கு அரியணை ஏற்ற உகந்த பாருண்டோ?
`சோறு எங்கே விக்(ற்)கு' மென வினவிய
கம்பனுக்கு - `தொண்டையிலே விக்கு'மென
எள்ளல் பதிலுரைத்து ரசம் ததும்பும்
ராமாயணக் காதையை எழுத வைத்ததும்
வாழ்க்கை நெறி கண்டு குறுகத் தரித்த
கணைகளால் வான்புகழ் கொண்ட குறளை- திருக்
குறளை வள்ளுவனுக்கு தந்ததும்.

கற்புக்கரசி கண்ணகிக்கும்
மாதரசி மாதவிக்கும் சமத்துவம் தந்து
`யானோ கொற்றவன்? யானே கள்வனென
கதறியரு நீதிமானை அந்திமத்தில் சாய்த்து
மானுடத்திற்கு மனுநீதி துடைத்து தர்மநீதி புகட்டின
சிலம்பு அதிகாரத்தை தந்த தமிழுக்கு
இணை மொழி வேறுண்டோ?

`யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோமென-பதிணென்
மொழி கற்றுத் தேர்ந்த மகாகவியும்
புளகாங்கிதப் பட்டான்.

`தமிழுக்கும் அமிழ்தென்று பேர்- இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நே`ரெ'ன பொங்கினான்
புரட்சிக்கவி சுப்புரத்தினம் பிள்ளை!

ஐம்பெரும் முறை அரியணை கண்ட
எம் அரசர் வாழும் வள்ளுவரோ...
தொல்காப்பியத்துக்கு ஒரு பூங்கா சரம் கட்டினார்
பொய்யா மொழிப்புலவனுக்கு- குறளோவிய
அணிகலன்கள் பூட்டினார்.
வாய்மொழிப் பாட்டாகவே நின்ற
கொங்கு வேளிர் அண்ணர்- பொன்னர்களுக்கு
பொன்னர் சங்கர் காதையுரைத்தார்- காவியமும் ஆக்கினார்.

அது மட்டுமா?

கற்புக்கரசி கண்ணகிக்கு ஓர் சிலை,
காவியம் இயற்றின கம்பனுக்கு மணி மண்டபம்,
குறள்நெறி தந்த பொய்யாமொழிப்புலவனுக்கு
குமரி கடலிலே ஒரு இமாலய சிற்பமென
எழுப்பி தமிழாகவே நிற்கிறார்.

தரணியில் அதற்கு செம்மொழி தகுதியளித்து- அவனிமெச்சும்
மாநாடும் கூட்டி மகிழ்கிறார்.
இதை விட தமிழுக்கு பெருமை வேறென்ன
வேண்டும். தமிழ் மாந்தர்தம் ஒற்றுமை தவிர?